search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி விகே சிங்"

    பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை வெளிநாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளதற்காக ரூ.2,021 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திரமோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் தான் கவனம் செலுத்துவதாகவும், இந்திய மக்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த பிரச்சினை நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் எழுப்பப்பட்டன.

    இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.2,021 கோடி செலவாகி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘பிரதமராக மோடி பதவி ஏற்ற கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து 2018 வரை 10 முக்கிய நாடுகள் உள்பட 55 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருப்பதாகவும், இதற்கான விமான பயண செலவு, விமான பராமரிப்பு கட்டணம் மற்றும் பிரதமருக்கான சிறப்பு ஏற்பாடுகளுக்காக இதுவரை ரூ.2,021 கோடி செலவாகி உள்ளது. வெளிநாட்டு பயணம் மூலம் இந்தியாவுக்கான வெளிநாட்டு நேரடி முதலீடு 1 லட்சத்து 36 ஆயிரத்து 77.75 மில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது’ என்று தெரிவித்தார்.#PMModi
    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளதாகவும் இதற்காக அரசு ரூ.2,012 கோடி செலவு செய்துள்ளதாகவும் மத்திய மந்திரி தெரிவித்தார். #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

    மோடி சொந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் பாராளுமன்ற மேல்-சபையில் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. பினோய் விஸ்வம் பேசும்போது, “பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதற்கான செலவு எவ்வளவு செய்யப்பட்டு இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்து வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-


    பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று உள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.2,012 கோடி செலவாகி இருக்கிறது. மோடி பயணம் செய்த தனி ஏர்இந்தியா விமானத்துக்கு பராமரிப்புக்கு மட்டும் ரூ.1,583 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #PMModi
    உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார். #Passport #PassPortSeva
    வாஷிங்டன்:

    மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங், அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் ‘பாஸ்போர்ட் சேவா’ திட்டத்தை தொடங்கி வைத்தார். பிறகு அவர் பேசுகையில், “இந்திய தூதரகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள், இந்தியாவில் உள்ள டேட்டா மையத்துடன் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு உள்ளன.

    இதனால், அங்கு பாஸ்போர்ட் வழங்கும் பணிகள் வேகமாக நடைபெறும். கடந்த வாரம், நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில், 48 மணிக்கும் குறைவான நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. விரைவில், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரகங்களிலும் இது நடக்கப்போகிறது. இன்னும் சில மாதங்களில், புதிய வடிவமைப்பிலான பாஸ்போர்ட்டுகளை இந்திய அரசு வழங்கும்” என்று கூறினார். #PassPort
    ×